கடன் மறுசீரமைப்பு மற்றும் டொலர் பற்றாக்குறையை முகாமைத்துவப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக Reuters செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாகவும் நேற்றிரவு வௌியான அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரேரணையை சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகளிடம் கையளிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வாஷிங்டனுக்கு செல்லவுள்ளதாகவும் Reuters செய்தி சேவை வௌியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.