0
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது.
கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமை ஆகியவற்றை பாதுகாப்பது போலவே, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு போதுமான பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றினூடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.