கொவிட் தடுப்பூசியை முழுமையாகக் பெற்றுக் கொண்டமைக்கான அட்டையின்றி பொது இடங்களுக்குச் செல்ல முடியாது எனத் தெரிவித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
‘ஏப்ரல் 30 ஆம் திகதியிலிருந்து பொது இடங்களுக்குச் செல்லும் போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டையை வைத்திருப்பது அவசியமாகும்’ என்று குறிப்பிட்டு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் கடந்த பெப்ரவரி மாதம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சன்ன ஜயசுமணவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.