இலங்கை நிலவரம் தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவதானம் செலுத்தியுள்ளார்.
இலங்கைவாழ் மக்கள் தொடர்பில் குறிப்பாக இளம் சமூகத்தினர் தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நாட்டின் சமூக , பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் கடந்த சில தினங்களாக குரல் எழுப்பியதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.
அமைதியாக வன்முறைகள் இன்றி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பாப்பரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் குரலுக்கு செவிமடுத்து, அவர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்குமாறு இலங்கை தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.