சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட்டிற்கும் இலங்கைக்கான சவுதி அரேபிய பதில் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க சவுதி அரேபியாவின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு விசேட வசதிகளை ஏற்படுத்தல் குறித்தும் சவுதியில் பணிபுரியும் இலங்கை பணியாளர்கள் தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் நசீர் அஹமட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.