கல்முனை வலய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் 15 தங்கப்பதக்கங்கள் மற்றும் 09 வெள்ளிப்பதக்கங்கள் வென்று மொத்தமாக 24 மாணவர்கள் மாகாண மட்டப்போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களாக கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இவ்வலய மட்டப்போட்டியில், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை 16 வயதுப்பிரிவு மாணவன் எம். அப்ஸீத் அஹமட் சம்பியன் பட்டம் பெற்று வெற்றி வாகை சூடியதோடு, மாகாண மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகியுள்ளார்.