ஜனாதிபதி தெரிவில் நடுநிலை வகிப்பது என்ற நிலைப்பாட்டில் தமது கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உள்ளதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி .வி விக்னேஸ்வரன் எம்பி தெரிவித்தார்.
ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நடு நிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டில் நாம் உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் நிலைப்பாடு மாற்றமடையலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.