கட்சியின் கொள்கை மற்றும் ஒழுக்கத்திற்கு முரணாக செயற்படுவோரை பதவிகளில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் நீக்குவதற்கு மத்திய செயற்குழுவிற்கும் தவிசாளருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தம் மேற்கொள்ள மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.