தொடரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடும் மழையையும் பொருட்படுத்தாது அதிகளவிலானவர்கள் இன்று(05) பகல் குருணாகல் நகரில் மாணவன் ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக அதீத பிரயத்தனம் மேற்கொண்டனர்.
மதகிற்குள் தவறி விழுந்து கழிவு நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை கண்டுபிடித்தாலும் மாணவனின் உயிரை அவர்களால் பாதுகாக்க முடியாமற்போனது.
இவர் வெஹர பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் கடைசி பிள்ளையாவார்.