கோவை குண்டு வெடிப்புடன் தொடர்புடையவருக்கும் சஹ்ரானுக்கும் தொடர்பு இருந்துள்ளது; திடுக்கிடும் தகவல் சொல்லும் பென்ட்ரைவ்
கடந்த மாதம் 23 ம் திகதி கோவை கோட்டை மேட்டில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் பொலிஸாரினால் கைது செயப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த விசாரணை தமிழக அரசின் பரிந்துரையின் கீழ் NIA க்கு மாற்றப்பட்டது இதற்கு தலைமை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்க பட்டார்.
NIA ஆல் தொடரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. முபீனுடன் தொடர்புடைய இருவரை விசாரித்து உள்ளனர் அவர்களை விடுதலை செய்தாலும் அவர்களை கவனித்து வரும் நிலையில்
பொலிஸார் கைது செய்தவர்களின் வீட்டில் நடைபெற்ற பாரிய தேடலில் வெடி மருந்துகள் ஐஸ் தீவிரவாத அமைப்பின் வாசகங்கள் மற்றும் ஒரு பென்ட்ரைவ் என்பன சிக்கியுள்ளது
இதில் 1௦௦க்கும் மேற்பட்ட ஐஸ் சித்தாந்தம் மற்றும் கழுத்தை அறுத்து கொள்ளும் காட்சிகள் உள்ளடங்கி உள்ளன மேலும் 2019இலங்கை தேவாலய குண்டு வெடிப்புக்கு காரண கர்த்தாவாகிய சஹ்ரானுக்கும் இந்த வெடிப்புடன் தொடர்புடையவருக்கும் நெருங்கிய தொடர்பு பேணப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
மேலும் இந்த விபத்தின் ஆயுதமான முபீன் 3கோவில்களை தகர்த்தவும் ஒத்திகை பார்த்துள்ளார் . அவர் திட்டத்தில் காரில் சிலிண்டர்களை நிரப்பி வெடிக்க செய்வதாகவும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது
கைதானவர்கள் 6 பேர் மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற பட உள்ளனர்.