0
யாழ்., அரியாலைப் பகுதியில் கேரள கஞ்சாப் பொதிகள் இன்று இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து கடத்தி வந்ததாக நம்பப்படும் 90 கிலோகிராம் கேரள கஞ்சாவே இராணுவத்திடம் சிக்கியுள்ளது.
இன்று அதிகாலை விசேட சோதனை நடவடிக்கையின் போதே 42 கஞ்சாப் பொதிகளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகளில் இருந்த 90 கிலோகிராம் கேரள கஞ்சாவும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் அரியாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.