வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (15) பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநரால் முப்படையினருக்குக் காணி சுவீகரிப்புக்கென பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி திணைக்களங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் விசேட கூட்டம் ஒன்றுக்கு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் பங்குபற்ற அதிகாரிகளுக்கு இடமளிக்கமாட்டோம் எனத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு வருகை தந்த அதிகாரிகளும் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மேற்படி கூட்டமானது ‘சூம்’ முறையில் நடத்தப்பட்டது என்று அறியமுடிந்தது.