குருநாகலில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இராணுவ மேஜர் உட்பட்டவர்கள் பயணித்த கார், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது வாகனத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 35 வயதுடைய இராணுவ மேஜரும், 30, 36 வயதுடைய இரண்டு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இருவரும் கல்கமுவ மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.