யாழ்., வடமராட்சி, யாழ். பீச் ஹோட்டலுக்கு அருகாமையில் ஓட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நெல்லியடி, திருமகள் சோதி பஸ் தரிப்பிட ஒழுங்கையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கவிதாசன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார் என்று நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.