முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர் என்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியுடன் மனைவி அயோமா ராஜபக்ச மற்றும் அவர்களது மகன் மனோர் ராஜபக்ச, மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரும் சென்றுள்ளனர்.
அதிகாலை 2.55 மணிக்கு அவர்கள் எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டனர்.
ஜனாதிபதி பதவியைத் துறந்த பின்னர் கோட்டாபய ராஜபக்ச உடனடியாக அமெரிக்காவுக்குச் செல்ல முயற்சித்தும் முடியாதிருந்தார் என்பது தெரிந்ததே.