மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலைத்தலைப்பு சிக்குண்டதால் வீதியில் தவறி வீழ்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். கோப்பாய் மத்தியைச் சேர்ந்த நாகேஸ்வரி சோதிலிங்கம் (வயது – 60) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
தாய், மகள், பேரப்பிள்ளை என 5 பேர் மோட்டார் சைக்கிளில் இருபாலையிலுள்ள தேவாலயத்துக்குச் சென்று வீடு திரும்பும்போது, தாயின் சேலை மோட்டார் சைக்கிளின் பின் சில்லினுள் சிக்கியுள்ளது. இதனால் அவர் வீதியில் விழுந்துள்ளார்.
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.