கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞர் ஒருவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீடு புகுந்த மர்மநபர்கள் விநாயகபுரத்தைச் சேர்ந்த தவக்குமார் சுரேஷ் (வயது 26) என்ற இளைஞரைக் கத்தியால் குத்தியும், பலமாகத் தாக்கியும் உள்ளனர்.
குறித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் இடைவழியிலேயே இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.