யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்கள் இருவர் நிதி மோசடி தொடர்பில் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற வழக்குப் பொருட்களாக உள்ள 70 பவுண் தங்கத்தை விடுவித்து தருவதாகக் கூறி 36 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாவை தங்கள் கணக்குகளுக்கு வைப்பிலிட வைத்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபர்களான இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பெண்கள் இருவரும் நேற்று மாலை காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 36 மற்றும் 38 வயதுடைய வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.