நீண்ட நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ். தென்மராட்சி, மீசாலையைச் சேர்ந்த லவராஜ் ஆர்நிதா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பெற்றோர் சேர்ப்பித்தனர்.
4 நாள்களின் பின்னர் மீண்டும் காய்ச்சல் தொடர்ந்துள்ளது. இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றோர் சேர்த்தனர். இந்தநிலையில் குழந்தை நேற்று உயிரிழந்தது.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.