செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜெனரல் சவேந்திர சில்வாவினுடைய அலுவலகத்துக்கு நிரந்தர மூடுவிழா!

ஜெனரல் சவேந்திர சில்வாவினுடைய அலுவலகத்துக்கு நிரந்தர மூடுவிழா!

0 minutes read
பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வுபெற்றிருந்தார். பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை முற்றாக ஒழிப்பதற்குப் புதிய அரசு  தீர்மானித்திருக்கும் நிலையில், இதுவரை அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் சவேந்திர சில்வா, பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக பணியாற்றிய காலத்தில் பயன்படுத்திய அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சவேந்திர சில்வாவின் பாதுகாப்புக்கு இணைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் ஆகியோர் தற்போது அவரவர் பணியாற்றும் சொந்த இராணுவ ரெஜிமண்டுகளுக்கு மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.