மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்திலிருந்து கைதி ஒருவர் இன்று தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன் நேற்று ஒருரைக் கைது செய்த பொலிஸார், அவரை இன்று பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
நீதிவான் அறையில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த கைதியின் விலங்கைப் பொலிஸார் கழற்றிய போது குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதையடுத்துத் தப்பியோடிய கைதியைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.