நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஆட்சி மாற்றமே ஒரே வழி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை மூன்று அடிப்படையில் பார்க்க வேண்டும். ஒன்று அரசுக்கு எதிரான சர்வஜன வாக்கெடுப்பு. அப்படி இந்தத் தேர்தலைப் பார்த்தல் 90 வீதமான மக்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பர்.
இரண்டாவது இந்தத் தேர்தல் முடிவின் அடிப்படையில் அரசு கலைய வேண்டும். அதன் பின் அதிகாரத்தில் இருப்பதற்கான தகுதியை அரசு இழக்கும். நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மூன்றாவது அடுத்து ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்ற முடிவை மக்கள் எடுக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும்.
இந்தத் தேர்தலின் பின் ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும். அந்த ஆட்சி மாற்றம் ஊடாகப் பொருளாதார மாற்றம் இடம்பெறும். புதிய அரசுக்கு சர்வதேச நாடுகள் உதவும்” – என்றார்.