இலங்கையின் சில பகுதிகளில் இன்றும் சிறியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த பிரதேசங்களில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்னிரியூட் அளவு கோளில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆகப் பதிவாகியுள்ளது என்று புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.