வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் இன்று காலை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.
10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று இங்கு நீராடச் சென்றது எனவும், அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே காணாமல்போயுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.