0
கொழும்பு – வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் சாவடைந்துள்ளார்.
மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் களுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.