கப் ரக வாகனமும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சாவடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழபோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டோவில் பயணித்த தனமல்வில பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட், அவரது தந்தை மற்றும் அவரது மனைவி ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
மூவரின் சடலங்களும் வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
கப் ரக வாகனத்தின் சாரதி உட்பட மூவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.