பசறையில் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பசறை – கோணக்கலை தோட்ட கீழ்ப் பிரிவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பெண் தொழிலாளர்கள் 10 பேர் உட்பட 11 பேர் பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குளவிக்கூடு ஒன்று கலைந்து தொழிலாளர்களைக் குளவிகள் சரமாரியாக தாக்கியுள்ளன.
குளவிக்கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்களைக் காப்பாற்றச் சென்ற இளைஞர் ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட 11 பேரும் பசறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.