தற்போது அதிகரித்து வரும் இன மற்றும் மத முரண்பாடுகளால் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு பக்கத்தில் சிங்களவர்களையும் தமிழர்களையும் தூண்டிவிட்டு இன ரீதியான பிரச்சினையைத் தலைதூக்கிவிட முயற்சி நடக்கின்றது. மறுபக்கத்தில் பௌத்தர்களையும் இந்துக்களையும் முட்டி மோதவிட்டு மத ரீதியிலான பிரச்சினையை மென்மேலும் தீவிரப்படுத்த சதி நடக்கின்றது.
இவ்வாறான நடவடிக்கைகள் இந்த நாட்டின் நல்லிணக்கத்துக்கு பெரிதும் பாதிப்பே ஏற்படுத்தி வருகின்றது.
மேற்படி இரு பிரச்சினைகளும் ஒரே மேசையில் பேசித் தீர்த்தால் தான் அந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டலாம். இல்லையேல் இந்தப் பிரச்சினைகள் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.” – என்றார்.