0
ஆஸ்திரேலியாவில் பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேரில் சந்தித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, “உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி சகோதரரே”என்ற வாசகத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் ஹரின் பெர்னாண்டோ பதிவேற்றியுள்ளார்.