0
காட்டு யானை தாக்கி ஆணொருவர் சாவடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் வயல் வேலைக்குச் சென்று விட்டு காட்டு வழியால் நடந்து வந்த வேளை யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 29 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.