தமிழ்தேசிய ஆதரவாளரும், மேதகு பிரபாகரனின் நம்பிக்கை நட்சத்திரமாக தமிழகத்தில் செயல்பட்டவரும், விடுதலை புலிகள் இயக்கத்தின் வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன் சென்னையில் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
விடுதலை புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரும், தமிழ்தேசிய சிந்தனையாளரும், நாம் தமிழர் கட்சி தடா சந்திரசேகரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காலமானார்.
காற்றில் கரைந்த தடா சந்திரசேகர் என கண்ணீரில் சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்களை பின் தொடரலாம், என் வாழ்வில் இழப்புகளும் சோதனைகளும் நிறையும் தருணங்களில் எல்லாம் நான் கொண்டிருந்த ஒரே ஒரு நம்பிக்கை மூத்தவர் இருக்கிறார் என்பது மட்டும்தான். அந்த நம்பிக்கையை தான் நான் இழந்து விட்டு அமர்ந்திருக்கிறேன்”
பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் மறைவு, தமிழ்த் தேசியப் பேரினத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் அஞ்சலி அறிக்கையில், எனது மூத்தவர் இல்லாத உலகில் இனி என்ன செய்வது எனப் புரியாமல் திசை காட்டியை இழந்த மாலுமிப் போல தவித்து இருக்கிறேன். தனித்திருக்கிறேன். நானும், மூத்தவரும், அண்ணனும் வெவ்வேறு கருப்பைகளில் கரு கொண்டாலும், இலட்சிய உறுதியில் ஒரே மனிதனாக உரு கொண்டவர்கள். என்னை நோக்கி வரும் சோதனை அம்புகளை எல்லாம் எதிர்கொண்டு கர்ணனின் கவசம் போல என்னை காத்து நின்றவர் அவர்தான்.
எனக்கு மட்டுமல்ல , என்னுயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கும், நம் தேசியப் படையான விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் அவர் வழக்கறிஞர் மட்டுமல்ல, நம்பிக்கைகளின் இருப்பிடம். நம் மூத்தவரும் அப்படித்தான்.
மனித வாழ்வில் எத்தனையோ இழப்புகள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு தாண்டி வருவதற்கு அளவற்ற மனவலிமை தேவைப்படுகிறது. என் வாழ்வில் இழப்புகளும் சோதனைகளும் நிறையும் தருணங்களில் எல்லாம் நான் கொண்டிருந்த ஒரே ஒரு நம்பிக்கை மூத்தவர் இருக்கிறார் என்பது மட்டும்தான். அந்த நம்பிக்கையை தான் நான் இழந்து விட்டு அமர்ந்திருக்கிறேன்.
நம் தேசியத் தலைவரின் தாய் தந்தையரான அம்மா பார்வதி அம்மாள் அப்பா வேலுப்பிள்ளை ஆகியோரை தமிழகத்தில் வைத்து பராமரித்து தன் தாய் தந்தையர் என பாதுகாத்தவர் அவர். கொடும் தடா சட்டத்தில் சிக்கிக்கொண்ட நம் சொந்தங்களை எல்லாம் மீட்டு வெறும் சந்திரசேகராக இருந்த நமது மூத்தவர் தடா சந்திரசேகராக மாறிய கதை நம் இனத்திற்கான விடுதலை வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
தடா சந்திரசேகரனின் மறைவு தமிழ்தேசிய ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “வழக்கறிஞர் தடா சந்திரசேகர் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருருகிறேன். என் மீது எப்போதும் அன்பை பொழிபவர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக காவல்துறை என்னை கைது செய்த போது நீதிமன்றத்திற்கு வந்து ஆறுதலாக நின்றவர். கடவுச்சீட்டு முடக்கப்பட்ட போது வழக்குக்காக ஆஜரானவர். அண்ணன் தடா சந்திரசேகர் அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தியும் தடா சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது, “எனது மூத்த வழக்கறிஞரும் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிய பெரும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர் அண்ணன் தடா சந்திரசேகர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளரான தடா சந்திரசேகர் இலங்கைக்கே சென்று ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டவர். தமிழ்நாட்டில் ஈழப்போர் குறித்தும், தமிழ் தேசிய விடுதலை குறித்தும் பேசி வந்தவர். பிரபாகரனே இவரை ஈழத்துக்கு அழைத்து நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலையை தொடர்ந்து விடுதலை புலிகள் அமைப்புக்காக ஆஜராகி வழக்கறிஞராக வாதிட்டவர் தடா சந்திரசேகர். பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாளும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த போது சென்னை திருவான்மியூரில் உள்ள தடா.சந்திரசேகர் வீட்டில் தான் தங்கினார்கள் என்று கூறப்படுகிறது.
விடுதலை புலிகளின் வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம். ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தனியரசு அமைப்பது தான் என்றும் கூறியுள்ளார்.
தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம். இந்த உண்மை விரைவில் உலகத்திற்குத் தெரியவரும் என்று கூறிய வழக்கறிஞர் தடா சந்திரசேகர், தனிப்பட்ட முறையில் இலங்கை சென்று வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும், புதுமாத்தளன், ஆனந்தபுரம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளுக்குச் சென்று போரினால் கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
-நவீனன்