குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 41 வயதான பெண்ணே உயிரிழந்தார்.
கடந்த 07ஆம் திகதி மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர், மனைவியுடன் முரண்பட்டார். பின்னர் கணவன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றார். கணவன் மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது, மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்றார். அவர் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.