இந்திய மத்திய அரசின் அழைப்பையேற்று டில்லி சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருடன் இன்று பேச்சு நடத்தினர்.
இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர்.
இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகளின் ஆதரவு அவருக்கு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், அவரை இந்திய மத்திய அரசு அழைத்து பேச்சு நடத்துகின்றமை இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.