சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டில்லியில் இன்னும் சில வாரங்களில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்றும் மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.