தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடாவுக்குப் புறப்படுகின்றார். கனடாவாழ் இலங்கையர்களுடனான சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.
தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதானமான இரு மக்கள் சந்திப்புக்களின் முதலாவது சந்திப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கனடாவின் டொரண்டோ நகரிலும், இரண்டாவது சந்திப்பு 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரிலும் இடம்பெறவுள்ளன.
இந்தப் பிரதான மக்கள் சந்திப்புகளுக்கு மேலதிகமாக கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவ சந்திப்புகளிலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பார்.