ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கதான் என்பது உறுதியாகியுள்ளது என்று ஜே.வி.பியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“மொட்டுக் கட்சி ரணிலைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் என்பது உறுதியாகியுள்ளது. பஸில் ராஜபக்ஷ ரணிலை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்.
ராஜபக்ஷ உள்ளிட்ட திருடர்களைப் பாதுகாப்பதற்காக ராஜபக்ஷ குடும்பத்தால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர்தான் ரணில்.
அவர் அந்தப் பணியைச் சரியாகச் செய்து வருவதால் அவரையே மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள். அவர்களின் கனவு இந்த ஜனாதிபதித் தேர்தலுடன் முடிவுக்கு வரும்.” – என்றார்.