அநுராதபுரத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
கேள்வி:- உங்களின் தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உங்களின் அரசியல் அந்தக் கட்சியில் இருந்தே ஆரம்பமானது. ஆகவே, கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. பிரச்சினைகளுக்குப் பேச்சுகள் ஊடாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.
கேள்வி:- உங்களின் பங்காளிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே… அது உங்களுக்குச் சவாலாக அமையாதா?
பதில்:- சவால் ஏதுமில்லை. தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளாரே?
பதில்:- அது அவரது நிலைப்பாடு. நாங்கள் எமது கட்சியின் வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் நிறைவேற்று சபை ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுப்போம். மிகச் சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம்.
கேள்வி:- நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப் போகின்றீர்களா?
பதில்:- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது.
கேள்வி:- புத்தாண்டு தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் குறிப்பிட விரும்புகின்றீர்களா?
பதில்:- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மகிழ்வுடன் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்.