டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணயின் இறுதியில் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் அமர்வு, அதன் தீர்ப்பைக் காலவரையறையின்றி ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கிலேயே அவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தான் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட இரண்டு வாரங்களின் பின்னர் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மேன்முறையீட்டு மனுவை முன்வைத்திருந்தார்.
டயனா கமகே மற்றும் பலரை தனது மேன்முறையீட்டின் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்ட ஓசல ஹேரத், இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ளதால் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்கத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றம் வந்துவிட்டு, பின்னர் ஆளுங்கட்சிப் பக்கம் டயனா கமகே தாவினார். அவர் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.