சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காட்டுப்புலம் கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை நிரந்தரமாகக் கையப்படுத்தும் விதமாக இன்று காலை 9 மணியளவில் அளவீட்டுப் பணிகளுக்காக நில அளவை திணைக்களத்தின் அதிகாரிகள் வருக வந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நில அளவை திணைக்கள அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி திருப்பினர்.
இந்தப் போராட்டத்தில் பொதுமக்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் பின்னர் கடற்படை முகாமுக்காகச் சுவீகரிக்கப்படவிருந்த பொதுமக்களின் காணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பார்வையிட்டதோடு அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.