செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹிருணிகா பிணையில் விடுவிப்பு!

ஹிருணிகா பிணையில் விடுவிப்பு!

1 minutes read
மூன்று வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவைப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி கொழும்பு – தெமட்டகொடைப் பகுதியில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞரைக் கடத்திச் சென்று தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில் ஹிருணிகாவைக் குற்றவாளி என நிரூபித்திருந்த கொழும்பு மேல் நீதிமன்றம், 3 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், தனக்கு எதிரான சிறைத் தண்டனைக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்திருந்தார்.

இதனால் அவரைப் பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பிணைக் கோரிக்கைக்கு அமைய அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More