தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களின் வாக்குகளால் அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கத் தயார். இந்த செய்தியை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுக்கிறோம் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தோ்தல்கள் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) ஜனாதிபதி தோ்தலுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்ட வேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தோ்தலுக்காக எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்காக நாம் அனைவரும் வந்து கட்டுப்பணத்தை வைப்புச் செய்தோம். 15 ஆம் திகதி வேட்பு மனுவை ஒப்படைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
எமது நாட்டை பொருளாதார ரீதியாக சீரழித்து ஊழல்மிக்க, கீழ்த்தரமான, அசிங்கமான அரசிலை முன்னெடுத்து வந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை கொண்ட அரசியலை வெற்றிபெற செய்விக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நாட்டின் பெரும்பான்மை மக்கள் இந்த தினம் வரும்வரை வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலவுகின்ற அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து நாட்டை அதலபாதாளத்திலிருந்து மீட்டெடுக்கின்ற வேலைத்திட்டத்தை கொண்டுள்ள அநுரவிடம் நாட்டை ஒப்படைக்க தயாராக இருக்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களின் வாக்குகளால் அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கத் தயார். இந்த செய்தியை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுக்கிறோம் என்றார்.