ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷ் புதிய பிரதமர் முஹம்மத் யூனுஸை தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு யூனுஸால் முடியும் என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களை அங்கு தொடர்ந்து தங்கி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பங்களாதேஷின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய இலங்கை சகல வழிகளிலும் உதவுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பங்களாதேஷ் பிரதமர், சந்தர்ப்பம் கிடைத்தால் விரைவில் பங்களாதேஷுக்கு வந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.