அண்மையில் நடைபெற்று முடிவடைந்த “சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் மக்களின் வாக்களிப்பு முறை” எனும் தலைப்பிலான அவையம் படிப்பு வட்டம் மக்களிடையே நிலவும் சமகால அரசியல் சிந்தனைகள் பற்றிய உரையாடல் தளமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 02.10.2024 புதன்கிழமை கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.
தேர்தலுக்குப் பின்னரான நிலை மற்றும் தேர்தல் முடிவுகளில் எவ்விதம் மக்களின் சமூக, பொருண்மிய, அரசியற் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பது தொடர்பிலும், மக்களிடையேயான அரசியல் விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடலுக்கான தளமாக இம்மாத “அவையம் படிப்பு வட்டம்” நகர்ந்துள்ளது,
கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் துணைச் செயலாளர் சி.சிவகஜன் தலைமையில் நடைபெற்ற குறித்த “அவையம்” படிப்பு வட்டத்தில் அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர். கே.ரி கணேசலிங்கம், வருகை விரிவுரையாளரும் ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியான செல்வின் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்களிடையே சமூக, பொருண்மிய, பண்பாட்டு, அரசியல் தளங்களில் கருத்து பரிமாற்றத்திற்கான வெளியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது