முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் எங்கள் கட்சி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.நாங்கள் தேர்தலில் போட்டியிடும் அதேவேளை அவர்களிற்கு ஆதரவளிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்,என அவர் தெரிவித்துள்ளார்.