செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அநுர அரசின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

அநுர அரசின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

1 minutes read
தேசிய மக்கள் சக்தி அரசின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.

புதிய அமைச்சரவை 21 பேருக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு பாதுகாப்பு, நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய அரசின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பின்வருமாறு:-

01. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க – பாதுகாப்பு, நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்

02. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்

03. விஜித ஹேரத் – வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்

04. பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

05. சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

06. சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

07. கே.டி லால் காந்த – விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்

08. அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர்

09. இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்

10. பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

11. சுனில் ஹந்துன்னெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

12. ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்

13. பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர்

14. பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

15. வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

16. சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்

17. சுனில் குமார கமகே – இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

18. வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

19. பேராசிரியர் கிரிசாந்த அபேசேன – விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர்

20. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சர்

21. பொறியியலாளர் குமார ஜயகொடி – வலுசக்தி அமைச்சர்

22. வைத்தியர் தம்மிக பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சர்

இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More