சுயாட்சி பாலஸ்தீனிய பிரதேசமான காசாவின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இஸ்ரேலிய குடியிப்பு பகுதிகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக.
காசா பகுதியிலிருந்து இரண்டு ராக்கெட்டுகள் இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ஏவப்பட்டதாகவும், எனினும், அது நடுவானில் தடுத்து முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலுக்குள் மூன்று ராக்கெட்டுகளை வீசிய சிறிது நேரத்திலேயே காசா பகுதியில் போராளிகளை குறிவைத்து பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.