கொரோனா வைரஸ் ஒரு சாதாரண காய்ச்சல் என்று கூறி வந்த பிரேசில் அதிபர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாஸ்க் அணிந்துள்ளார்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கபப்ட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு நேற்று வரை 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜாயிர் போல்சனாரோ சில தினங்களாக, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதால், அவருக்கு நேற்று (கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கு முன்பு மூன்று முறை பொல்சனாரூவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான் என்று கூறிவந்த பொல்சனாரூ, தனக்கு கொரோனா வைரசால் எந்த பாதிப்பும் இல்லை என முன்பு கூறினார்.
கொவிட்-19 நோய்த்தொற்று பரவல் பிரேசிலில் தீவிரமாகச் சென்றுகொண்டிருந்தபோது, சமூக விலகல் அறிவுரைகளை கிடப்பில் போட்டுவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் தலைநகர் பிரேசிலியாவில் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையைக் கிளப்பியது.
இதுமட்டுமின்றி, தொடக்கத்திலிருந்தே ஊரடங்கு நிலைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்த ஜாயிர் போல்சனாரோ, சமூக முடக்கம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும் என்று வாதிட்டார்.
இது தொடர்பாகக் கடந்த மார்ச் மாதம் நடந்த மாகாண ஆளுநர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், நமது வாழ்க்கை தொடர்ந்து நடக்க வேண்டும். வேலைகளை பாதுகாக்க வேண்டும். நாம் கண்டிப்பாக இயல்புநிலைக்குச் சென்றே தீர வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் மாஸ்க் அணிவதையும் தவித்து வந்த பொல்சனாரூ, பொது இடங்களில் பெரும்பாலும் மாஸ்க் அணியாமல் தோன்றி வந்தார். தற்போது செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாஸ்க் அணிந்திருந்தார். அதை இணையவாசிகள் பலரும் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.