அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குண்டாக இருப்பவர்கள் தான் அதிகம் பேர் பலியாகி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையினை தொலைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளுக்கு நாள் பல்வேறு விதமான ஆய்வு முடிவுகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
இதில் அமெரிக்கா கொரோனா தாக்கத்தினால் அதிகமாக பாதிப்பினையும், உயிர்பலியையும் கொடுத்து வருகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி, வயது மூப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர் என்று கூறப்பட்டாலும் தற்போது உடல் எடையினைக் கொண்டவர்களும் பலியாகி வருவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் குண்டாக உள்ளவர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே பிஎம்ஐ 30க்கு மேல் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், 40 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேணடும் என்றும் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அந்நாட்டு மக்ககளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவர்களின் எச்சரிக்கை காரணமாக உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உடல் எடையை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறார்கள்.