வாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் கிளச்சியாளர்களின் ராணுவத் தளங்கள் மீது நேற்று அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வடக்கு ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ஈரான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு அமெரிக்க வீரர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அமெரிக்காவை அச்சுறுத்த நினைக்கும் சீனா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டின் கூறியுள்ளார். பைடன் அதிபராகப் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் ராணுவத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை சட்டங்களில் மாற்றங்கள் தேவை
குடியுரிமைச் சட்டங்களில் காலத்துக்கேற்ற சீர்திருத்தங்களை பைடன் செய்ய விரும்புவதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். ‘அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கு திறமையானவர்களை பயன்படுத்திக் கொள்வது அவசியம். இதனால், விசா மற்றும் குடியுரிமை விதிமுறைகளில் நிறைய மாற்றங்கள் தேவை என்று அதிபர் விரும்புகிறார்’ என்று கூறியுள்ளார்.