வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இந்திய அமெரிக்கரான கவுதம் ராகவனை வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் பதவிக்கு உயர்த்தினார். தற்போது அந்த பதவியில் இருக்கும் கேத்தி ரஸ்ஸல் என்பவர், யுனிசெப்பின் அடுத்த நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்திற்கு கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அமெரிக்கரான கவுதம் ராகவன் இந்தியாவில் பிறந்தவர். சியாட்டிலில் வளர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.
கவுதம் ராகவன் ஜனாதிபதியின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், மக்கள் உரிமைகள் மற்றும் சமூக நீதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அமைப்புகளுக்கு ஆலோசனையும் வழங்கி வந்தார், பிடன் அறக்கட்டளையின் ஆலோசகராகவும் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.